பிரபல மலையாள நடிகை கே.பி.ஏ.சி.லலிதா காலமானார்.!!

பிரபல மலையாள நடிகை கே.பி.ஏ.சி.லலிதா காலமானார். அவருக்கு வயது 74. மலையாளத்தில் பிரபல குணசித்திர நடிகையாக வலம் வருபவர் கே.பி.ஏ.சி.லலிதா. இவர் தமிழில் காதலுக்கு மரியாதை, காற்று வெளியிடை, அலைபாயுதே, உள்ளம் கேட்குமே, கிரீடம், மாமனிதன் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் 550 க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் 1991 மற்றும் 2001ஆம் ஆண்டுகளுக்கான சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும், 4 முறை கேரளாவின் மாநில அரசு விருதையும் பெற்றுள்ளார்.
மலையாள இயக்குநர் பரதன் மனைவி இவர். 73 வயதான லலிதா சில மாதங்களுக்கு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அவரின் தீவிர ரசிகரும், கேரள நாடகக் கலைஞர்கள் சங்க நிர்வாகியுமான கலாபவன் சோபி என்பவர் கல்லீரல் தானம் செய்ய அப்போது முன்வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று இரவு லலிதா காலமானார். இவரது மறைவை அடுத்து திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description