dark_mode
Image
  • Saturday, 06 September 2025

நாடுகள்: ஜெய்சங்கர் இந்தியாவின் உரிமையை அங்கீகரித்த உலக நாடுகள்: ஜெய்சங்கர்

நாடுகள்: ஜெய்சங்கர்  இந்தியாவின் உரிமையை அங்கீகரித்த உலக நாடுகள்: ஜெய்சங்கர்

பயங்கரவாத செயல்களில் இருந்து தனது மக்களை காப்பதற்கான இந்தியாவின் உரிமையை உலகம் முழுவதும் உள்ள நாடுகள் அங்கீகரித்து உள்ளன'' என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

இத்தாலிய தேசிய தினத்தை முன்னிட்டு தலைநகர் டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: பஹல்காமில் நடந்த கொடூர தாக்குதலுக்கு பிறகு இந்தியாவிற்கு துணை நின்ற இத்தாலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பயங்கரவாத முகாம்களை அழித்து உறுதியான, தீர்மானமான பதிலடியை இந்தியா கொடுத்தது.

பயங்கரவாத செயல்களில் இருந்து தனது மக்களை காப்பதற்கான இந்தியாவின் உரிமையை உலக நாடுகள் அங்கீகரித்து உள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத செயல்களை சகித்துக் கொள்ள மாட்டோம் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

related_post