dark_mode
Image
  • Tuesday, 22 September 2026

12ம் வகுப்பு பொதுத்தேர்வு!.. சிசிடிவி கேமரா கண்காணிப்பு!.. தமிழக அரசு உத்தரவு...

12ம் வகுப்பு பொதுத்தேர்வு!.. சிசிடிவி கேமரா கண்காணிப்பு!.. தமிழக அரசு உத்தரவு...

2025 - 26 கல்வி ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகத்தில் மார்ச் 2ம் தேதி துவங்கி மார்ச் 26ம் தேதி முடிவடையும் எனது ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே,

செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 9ம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்திருக்கிறது. 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.. நடக்கவுள்ள 12ம் வகுப்பு பொதுத் தேர்வை 8.7 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர்..

இந்நிலையில்தான், கேள்வித்தாள் மையங்களை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க வேண்டும் என தேர்வு இயக்குனர் உத்தரவிட்டிருக்கிறர். பனிரெண்டம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அனைத்து கேள்வித்தாள் மையங்களிலும் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கேமராக்களை பொறுத்து உத்தரவிடப்பட்டிருக்கிறது.

 

அதேபோல் தேர்வு அறை முதன்மை கண்காணிப்பாளர் பணியில் முழுக்க முழுக்க அரசுப் பள்ளி ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும் எனவும் தேர்வு துறை இயக்குனர் தெரிவித்திருக்கிறார்..

related_post