விஜய்யுடன் தான் கூட்டணி.. முடிவு செய்து விட்டார்களா ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி?
தமிழக அரசியலில் நிலவி வந்த யூகங்களுக்கு வலுசேர்க்கும் வகையில், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபகாலமாக இரு கட்சிகளுக்கும் இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் அதிரடி முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் நீடிப்பது கட்சியின் எதிர்காலத்திற்கு பலன் தராது என கருதும் அவர்கள், விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகத்துடன்' கூட்டணி அமைக்க பச்சைக்கொடி காட்டிவிட்டனர் என்று கூறப்படுகிறது.
தொடக்கத்தில் தயக்கம் காட்டிய சோனியா காந்தியையும் ராகுல் மற்றும் பிரியங்கா சமாதானப்படுத்திவிட்டதாக தெரிகிறது. இதன் மூலம், விஜய் - காங்கிரஸ் கூட்டணி அமைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.