நடிகர் சித்தார்த்தின் குற்றச்சாட்டு பொய்! - இந்து மக்கள் கட்சியினர் புகார்

நடிகர் சித்தார்த் மீது இந்து மக்கள் கட்சியினர் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
அண்மையில் நடிகர் சித்தார்த் வெளியிட்ட சமூகவலைத்தளப் பதிவில், மதுரை விமான நிலையத்திற்கு குடும்பத்துடன் சென்றதாகவும், சோதனையின்போது தன்னுடைய மின்னணு சாதனங்களை, அருகில் உள்ள DRIVE-இல் CISF வீரர்கள் தூக்கி வீசியதாகவும் கூறினார்.
மேலும், தன் தாயாரின் கைப்பையில் நாணயங்கள் இருப்பது தெரிந்தும் வெளியே எடுக்கும்படி அவர்கள் வற்புறுத்தியதாக தெரிவித்த சித்தார்த், CISF வீரர்கள் தங்களிடம் இந்தியில் பேசியதாக குற்றம்சாட்டினார். தன்னுடைய பெற்றோரிடம் CISF வீரர்கள் நடந்துகொண்ட விதம் அச்சுறுத்தும் விதமாக இருந்தது என்றும் அவர் பதிவிட்டார்.
இந்நிலையில் மதுரை விமான நிலைய சம்பவம் தொடர்பாக நடிகர் சித்தார்த் மீது மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. CISF வீரர்கள் இந்தியில் பேச சொல்லி கட்டாயப்படுத்தியதாக நடிகர் சித்தார்த் விளம்பர நோக்கத்தோடு கருத்து பதிவிட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், CISF வீரர்களை களங்கப்படுத்தும் விதமாக பொய் குற்றச்சாட்டுகளை இணையத்தில் வெளியிட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description