dark_mode
Image
  • Thursday, 06 March 2025

தெங்கம்புதூரில் வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு.

தெங்கம்புதூரில் வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு.

தொல்லியல் ஆய்வாளர் ஞாலம் முனைவர்.சிவ.மதன்குமார் மற்றும் தொல்லியல் ஆர்வலர் கொட்டாரம் க. சுந்தர் என்பவரும் இணைந்து நடத்திய தொடர் கள ஆய்வில்

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் பறக்கைக்கு அருகிலுள்ள தெங்கம்புதூர் என்ற ஊரில் அமைந்துள்ள மறுகால்தலை கண்டன் சாஸ்தாதிருக்கோவில் கருவறையின் அருகில் அரசால் இதுவரை ஆவணப்படுத்தப்படாத வட்டடெழுத்து கல்வெட்டு கண்டுபிடித்துள்ளனர் இது ஆயிரம் வருடம் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை முறையாக படியெடுத்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கும் தொல்லியல் துறைக்கும் தபால் மூலம் அனுப்பியுள்ளார்கள். குமரி மாவட்டத்தில் இதுபோன்று பல கல்வெட்டுகளை படியெடுத்து உலகத்தமிழ் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

BY.PTS NEWS M.KARTHIK

.

comment / reply_from

related_post