ஆஸ்துமா இருந்தும் விடிய விடிய மது, கும்மாளம்! மயங்கிய கேளம்பாக்கம் மாணவியை தூக்கி அலைந்த ஆண் நண்பர்

சென்னை: சென்னை கேளம்பாக்கத்தில் கல்லூரி மாணவி ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி உயிரிழந்த விவகாரத்தில் புதிய தகவலாக அந்த மாணவியை தூக்கிக் கொண்டு அவருடைய ஆண் நண்பர் மருத்துவமனையில் சேர்த்ததாக தெரிகிறது.
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி அனிதா (19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கேளம்பாக்கத்தை அடுத்த தனியார் கல்லூரியில் பிசிஏ படித்து வந்தார். இவர் கல்லூரியில் விடுதியில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் படூரில் மாணவியின் தோழி ஒருவர் அபார்ட்மென்ட்டில் வீடு எடுத்து தங்கியிருந்தாராம். இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி கல்லூரி விடுதியில் இருந்து புறப்பட்ட அந்த மாணவி அனிதா, படூரில் உள்ள தோழியின் வீட்டிற்கு சென்றார்.
இதையடுத்து கடந்த 1ஆம் தேதி இரவு சக தோழிகள் 4 பேருடன் இணைந்து வீக் எண்ட்டை கொண்டாட மது விருந்து வைத்துக் கொண்டனர். இரவு 9 மணிக்கு ஆரம்பித்த இந்த விருந்து இரவு முழுக்க நீடித்ததாக சொல்லப்படுகிறது.
இதில் அனிதா அவ்வப்போது வாந்தி எடுத்துள்ளார். பின்னர் விடியற்காலையில் அனைவரும் போதையில் படுத்து உறங்கிவிட்டனர். ஆனால் மாலை 4 மணியாகியும் அனிதா எழுந்திருக்கவில்லை என தெரிகிறது.
இதனால் தோழிகள் அவரை எழுப்ப முயன்ற போது அவர் மயக்கத்தில் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த தோழிகள், அனிதாவின் ஆண் நண்பருக்கு போன் செய்து விவரத்தை தெரிவித்தனராம்.
அவரும் பைக்கில் பதறிக் கொண்டு வந்து அந்த பெண்ணை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர், "மாணவிக்கு நாடித் துடிப்பு மிகக் குறைவாக உள்ளது. எனினும் சிகிச்சை அளித்து பார்க்கலாம்" என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கேளம்பாக்கம் போலீஸார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை கேளம்பாக்கத்தில் கல்லூரி மாணவி மூச்சுத்திணறி பலி! அளவுக்கு அதிகமாக மது குடித்ததுதான் காரணமா?"
இதையடுத்து போலீஸார் அனிதாவின் தோழிகளிடம் விசாரணை நடத்தினர். முதல் கட்டமாக மாணவிக்கு ஏற்கெனவே ஆஸ்துமா இருந்ததாகவும் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு இரவெல்லாம் நடனமாடியதால் அவர் சாப்பிட்ட உணவும் மதுவும் மூச்சுக் குழாயில் சிக்கி இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கிறார்கள். எனினும் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்தால்தான் தெரியும் என்கிறார்கள்.
தஞ்சையில் இருந்து சென்னைக்கு படிப்பதற்காக ஆயிரங்களை கொட்டி சேர்த்தாலும் பிள்ளைகளின் கூடா நட்பு கேடில் முடியும் என்பதை இந்த சம்பவம் நிரூபித்துள்ளது. படிப்பு, வாழ்க்கையில் முன்னேற்றம், குடும்ப கஷ்டம், பெற்றோர் உழைப்பை மறந்துவிட்டு அற்ப போதைக்காக மாணவர்கள் மது, போதை பொருட்களுக்கு அடிமையாவதை தடுக்க முயற்சிகள் போதாது என்பதே நிதர்சனம் என்கிறார்கள். எல்லாவற்றையும் விட சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு வேண்டும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
BY.PTS NEWS M.KARTHIK
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description