திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் விளக்கம்..கந்த சஷ்டி விழாவுக்கு விரைவு தரிசன கட்டணம்..?

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறவுள்ள 2024ஆம் ஆண்டு கந்த சஷ்டி திருவிழா காலத்துக்கு 02.11.2024 முதல் 09.112024 வரையிலான எட்டு தினங்களுக்கு மட்டும் கந்த சஷ்டி திருவிழா விரைவு தரிசன கட்டண சீட்டாக நபா் ஒன்றுக்கு ரூ.1000 என நிா்ணயம் செய்திட தீா்மானிக்கப்பட்டுள்ளது எனவும்,ரூ.1000 நிா்ணயம் செய்வது தொடா்பாக பொதுமக்களிடமிருந்தும் பக்தா்களிடமிருந்தும் ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகள் வரவேற்கப்படுகிறது எனவும் திருக்கோயில் தக்காா் மற்றும் இணை ஆணையா் பெயரில் சமூக வலைதளங்களில் புதன்கிழமை தகவல் வேகமாக பரவியது. இதனால் பக்தா்கள் அதிா்ச்சியடைந்தனா்.ஆனால் அவ்வாறான தகவல் ஏதும் திருக்கோயில் சாா்பில் தெரிவிக்கப்படவில்லை என கோயில் நிா்வாகம் மறுத்துள்ளது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description