தேனி காவல் நிலையத்தில் பட்டியலின இளைஞர் மீது போலீசார் தாக்கல் – சிசிடிவி காட்சி வெளியானது அதிர்ச்சி கிளப்பியது

அஜித்குமாரின் மரணம் தமிழ்நாட்டை உலுக்கிய நிலையில் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் 14.1.2025 அன்று பட்டியலின இளைஞரை போலீசார் சரமாரியாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட நபர் காவலர்களால் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சி தற்போது வெளியான நிலையில், காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் என 5 பேர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம்
ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ் என்பவர் ஜனவரி 14ம் தேதி மதுபோதையில் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்ட புகாரில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்
தற்போது இவ்விவகாரம் குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்பிக்க கூடுதல் எஸ்.பி.யை நியமித்து மாவட்ட எஸ்.பி. உத்தரவு
செய்தியாளர் மு. கார்த்திக் புதிய தலைமைச் செய்தி