dark_mode
Image
  • Friday, 04 July 2025

சிசிடிவி காட்சி வழங்கியதால் பெட்ரோல் பங்குதாரர் கொலை: விசிக வன்முறைக்கு எதிராகக் கொந்தளிக்கும் செங்கல்பட்டு

சிசிடிவி காட்சி வழங்கியதால் பெட்ரோல் பங்குதாரர் கொலை: விசிக வன்முறைக்கு எதிராகக் கொந்தளிக்கும் செங்கல்பட்டு

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தபோது பாமக இளைஞர் முரளிதரன் அவர்களின் மீது விசிக-வை சார்ந்த நான்கு பேர் தாக்குதலை நடத்தினர் தற்காப்பிற்காக தம்பி முரளிதரன் அவர்களும் தன்னை தாக்கியவர்களை தாக்கினார்.

தம்பி முரளிதரன் அவர்கள் காவல்துறைக்கு கொடுத்த புகாரின் அடிப்படையில் பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் உரிய குற்றவாளிகளை கைது செய்தனர்.

மேலும் அந்த தாக்குதல் நடந்த சிசிடிவி கேமரா காட்சி ஆனது சமூக வலைதளங்களில் பெரும் அளவில் வைரலானது.

இதற்கிடையில் தற்போது அந்த பெட்ரோல் பங்கின் உரிமையாளர் திரு மோகன்ராஜ் என்பவர் சம்பவத்தை நடத்திய விசிக கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறிப்பாக முரளிதரன் சம்பவத்தில் அந்த சிசிடிவி காட்சி மட்டும் இல்லையென்றால் மிகப்பெரியதொரு நாடகத்தை இந்த சதிகார கூட்டம் அரங்கேற்றி இருக்கும் அப்படி இருக்கக்கூடிய தருணத்தில் சிசிடிவி கேமரா காட்சியை ஏன் கொடுத்தாய் என்றும் அதனால் தங்களுக்கு மன வருத்தம் ஏற்படுத்ததாலும் இந்த கொலையை அரங்கேற்றி உள்ளோம் என்று விசிகவை சார்ந்த ரகு என்பவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

எண்ணி பாருங்கள் ஒரு சம்பவத்தின் அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடிய சாட்சியத்தை காவல்துறைக்கு கொடுத்ததால் அந்த காட்சி வைரலானதால் இப்படியான ஒரு சம்பவத்தை நிகழ்த்தி இருக்கக்கூடிய இந்த கொடூர கும்பலுக்கு உச்சபட்ச தண்டனை கொடுக்க வேண்டும்.

செய்தியாளர் மு. கார்த்திக் புதிய தலைமைச் செய்தி

related_post