திருக்குறள் பரப்புரை நிறைவு செய்த மாணவி தீக்ஷா..!

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை ஏலாக்கரை பகுதியை சேர்ந்த ஜோணி அமிர்த ஜோஸ் மற்றும் ஸ்மிதா இவர்களின் இளைய மகளான ஜோ.ஸ்.தீக்ஷா, தனது சிறுவயதிலேயே அற்புதமான சாதனையை உருவாக்கியுள்ளார்.
தீக்ஷா, நித்திரவிளை கிறிஸ்துராஜபுரம் ஜெயமாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி முதல், "தினம் ஒரு திருக்குறள்" என்ற தலைப்பில் திருக்குறள் சொல்லும் காணொளிகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து, அதன் மூலம் திருக்குறளை பரப்பும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் வயது வெறும் 9 ஆகும்.
தீக்ஷாவின் இந்த முயற்சி தனிநபர்கள், திருக்குறள் அமைப்புகள், மற்றும் திருக்குறள் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தது. பலரும் அவரது காணொளிகளை பகிர்ந்து திருக்குறளின் பெருமையை முன்னேற்ற உதவினர். தனிச்சிறப்பாக, அவர் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தில், 1330வது திருக்குறளை முடித்து சாதனை படைத்தார்.
இளவயதிலேயே திருக்குறளை உலகுக்கு பரப்பிய தீக்ஷாவின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது. அவரது இந்த சாதனைக்கு புதிய தலைமை செய்தி பத்திரிக்கை மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description