dark_mode
Image
  • Friday, 07 March 2025

சென்னையில் மூன்று மெட்ரோ நிலையங்களில் லுலு ஹைப்பர் மார்க்கெட் – மாயமாகும் பிரம்மாண்ட மால்!

சென்னையில் மூன்று மெட்ரோ நிலையங்களில் லுலு ஹைப்பர் மார்க்கெட் – மாயமாகும் பிரம்மாண்ட மால்!

 

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) நிறுவனத்திற்கு அதிக வருவாயைக் கொண்டுவரும் விதமாகவும், பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு, நேரம் செலவழிக்கும் விதமாகவும் லுலு ஹைப்பர் மார்க்கெட் மே மாதம் மெட்ரோ நிலையங்களில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

ஷெனாய் நகர் மற்றும் சென்ட்ரல் ஆகிய இரண்டு மெட்ரோ நிலையங்களில் திறக்கப்படும். சிஎம்ஆர்எல் நிறுவனம் இதற்கான ஒப்பந்தத்தை கிரேஸ் சர்வீஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. அதேபோல் ஷெனாய் நகர் மெட்ரோவில் சிறிய தியேட்டர் அமைக்கும் பணிகளும் நடக்க உள்ளன. சென்னை சென்ட்ரல், ஷெனாய் நகர் மற்றும் விம்கோ நகர் ஆகிய நிலையங்களில் ஹைப்பர் மார்க்கெட் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மெட்ரோ நிலையங்களில் ஹைப்பர் மார்கெட்டின் நகர விற்பனை நிலையங்கள் இருப்பதால், மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் வருகை அதிகரிக்கலாம் என்று CMRL அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

 

ஷெனாய் நகரில், திரு.வி.கா பூங்காவிற்கு கீழே ஒரு லட்சம் சதுர அடியில் ஹைப்பர் மார்க்கெட் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

சென்ட்ரலில், 28,000 சதுர அடியில் கான்கோர்ஸ் மட்டத்திலும், விம்கோ நகரில், மெட்ரோ ரயில் பராமரிப்புக் மையத்திற்கு மேல் 40,000 சதுர அடி இடத்திலும் ஹைப்பர் மார்க்கெட் அமைக்கப்படும். சென்னை சென்ட்ரல் மற்றும் ஷெனாய் நகர் மெட்ரோ நிலையங்களில் உள்ள ஹைப்பர் மார்க்கெட்களை மார்ச்/ஏப்ரல் மாதத்திற்குள் திறப்போம். இன்றில் இருந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு, விம்கோ நகரில் மெட்ரோ திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

பைக் மற்றும் கார் பார்க்கிங் உள்ள இடங்களில் காணப்படும் மெட்ரோ ரயில் சேவை மையங்களில் ஹைப்பர் மார்க்கெட் அமைக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

 

லூலூ மால்

 

தமிழ்நாட்டில் லுலு குழுமம், ஷாப்பிங் மால்கள், ஹைப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் உணவு பதப்படுத்துதல் மற்றும் உணவு பதப்படுத்துதல் போன்றவற்றை அமைக்க ரூ.3,500 கோடி முதலீடு செய்ய தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்க உள்ளன. சென்னை லூலூ மால் கட்டுமானம் தொடர்பான முக்கியமான சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

அதன்படி நில சோதனை தாமதம் ஆன காரணத்தால் இங்கே இன்னும் கட்டுமானம் தொடங்கப்படவில்லை. இந்த மாத இறுதியில் கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டப்படலாம் என்ற தகவல்கள் வருகின்றன. அடுத்த வருடம் இவர்களின் மால் சென்னையில் திறக்கப்பட உள்ளது. அதே சமயம் ஹைப்பர் மால் கோவையில் ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்டது.

 

லுலு குழுமம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான உணவு பதப்படுத்துதல் மற்றும் தளவாட மையத்தையும் தமிழ்நாட்டில் அமைக்கும். நிறுவனத்தில் இருந்து உயர்மட்டக் குழு விரைவில் மாநிலத்திற்கு வருகை தந்து, இடங்கள் மற்றும் தொடர்புடைய ஆலோசனைகளை மேற்கொண்டு முதலீடு செய்யப்படும் இடத்தை இறுதி செய்யும்.

 

எங்கே மால் வருகிறது?: இந்த நிலையில்தான் பாஷ்யம் குழுமத்துடன் இணைந்து ECR இல் லூலூ மால் அமைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அங்கே இருக்கும் பிரார்த்தனா தியேட்டர் சமீபத்தில் பாஷ்யம் மூலம் வாங்கப்பட்டது.. அந்த திறந்தவெளி தியேட்டர் இடிக்கப்பட்டது. ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில், மகாபலிபுரம் செல்லும் வழியில், 29 ஏக்கர் நிலம், பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டு, இடிக்கும் பணி ஏற்கனவே துவங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ₹550 கோடிக்கு மேல் என்று ரியல் எஸ்டேட் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

இங்குதான் அந்த மால் கட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இங்கே மிகப்பெரிய குடியிருப்பும் அமைக்கப்பட உள்ளது. அதன் அருகிலேயே லூலு மால் அமைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

 

செய்தியாளர். மு கார்த்திக் புதிய தலைமைச் செய்தி

comment / reply_from

related_post