நாகர்கோவில் டைனோசர் பார்கில் ரூ.3.47 கோடியில் அறிவியல் பூங்கா – மேயர் மகேஷ் அடிக்கல் நாட்டினார்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் டைனோசர் பார்கில் ரூ.3 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில், நகர மேயர் மகேஷ் இன்று பங்கேற்று, பணிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
இந்த அறிவியல் பூங்கா, தொழில்நுட்ப வளர்ச்சியைப் புரிந்துகொள்வதற்கும், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அறிவியல் தொடர்பான அனுபவங்களை நேரடியாக பெறுவதற்கும் உதவக்கூடியதாக இருக்கும்.
பூங்காவில் அமைக்கப்படும் முக்கிய அம்சங்கள்:
அதிநவீன அறிவியல் கருவிகள் அடங்கிய பிளானட்டோரியம்
ஏராளமான அறிவியல் உபகரணங்கள்
குழந்தைகளுக்கான விளையாட்டு திடல்
பசுமை வளமான புல் தரை
கண்காட்சிக்கு நீர் வீழ்ச்சி
பேட்மின்டன் விளையாட்டு மைதானம்
அறிவியல் பூங்காவின் பயன்கள்
மேயர் மகேஷ், "இந்த அறிவியல் பூங்கா பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதேசமயம், பொழுதுபோக்கிற்கும் சிறந்த இடமாக மாற்றப்படும். இதற்கான பணிகள் விரைவில் முடிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
செய்தியாளர். மு. கார்த்திக், புதிய தலைமைச் செய்தி
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description