
திமுக எம்எல்ஏ சரவணன் பாஜகவில் இணைந்தார்..!
திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ சரவணனுக்கு வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படாததால் அதிருப்தி அடைந்த அவர் இன்று பா.ஜ.,வில் இணைந்தார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., டாக்டர் சரணவன், அக்கட்சியின் மருத்துவ அணியின் மாநில நிர்வாகியாக உள்ளார். இவர் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமாகவும் இருந்தார்.
நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கு திருப்பரங்குன்றம், மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு அளித்தார். ஆனால், அவருக்கு தேர்தலில் வாய்ப்பு அளிக்கவில்லை. இந்த நிலையில் சென்னையில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில், டாக்டர் சரவணன் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.