dark_mode
Image
  • Thursday, 17 July 2025
'தளபதி 65' படத்தின் நாயகி - பூஜா ஹெக்டே

'தளபதி 65' படத்தின் நாயகி - பூஜா ஹெக்டே

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜயின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் இந்த 'தளபதி 65 ' படத்தில் பூஜா ஹெக்டே அல்லது ராஷ்மிகா மந்தனா நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது .

இந்நிலையில் பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'முகமூடி' படத்துக்குப் பிறகு பூஜா ஹெக்டே எந்தவொரு படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. தற்போது தெலுங்கு மற்றும் இந்தியில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

related_post