dark_mode
Image
  • Sunday, 24 August 2025
தமிழக அரசியலில் பரபரப்பு அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிவிப்பு

தமிழக அரசியலில் பரபரப்பு அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிவிப்பு

தமிழக தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கிய நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்துள்ளார்.

நான் என்றும் வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியின் எண்ணித்திற்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் புரட்சித் தலைவர் மற்றும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சி தொடர, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான அம்மாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்

நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று அம்மா நமக்கு காட்டிய கட்சி ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும். என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய அம்மாவின் உண்மைத் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள். அம்மா அவர்கள் உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன். நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. புரட்சித்தலைவியின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

related_post