dark_mode
Image
  • Friday, 07 March 2025

தமிழகம் முழுவதும் 400 இடங்களில் ஜல்லிக்கட்டு: அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் 400 இடங்களில் ஜல்லிக்கட்டு: அரசு அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 18 மாவட்டங்களில் 400 இடங்களில் ஜல்லிக்கட்டு மற்றும் ஏனைய விளையாட்டுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் சிறப்பு திட்ட அதிகாரி நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், மதுரை, விருதுநகர், கரூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். புலிக்குளம், காங்கேயம், உம்பளச்சேரி போன்ற பிரபல காளைகளும் போட்டியில் பங்கேற்கின்றன.

பங்கேற்க விரும்புவோர், www.jallikattu.tn.gov.in இணையதளத்தில் முன்பதிவு செய்து, காளையின் தகவல்கள் மற்றும் மருத்துவ சான்றிதழ் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும். அனைத்து போட்டிகளும் காவல்துறை மற்றும் பிற துறைகளின் கண்காணிப்பில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 400 இடங்களில் ஜல்லிக்கட்டு: அரசு அறிவிப்பு

comment / reply_from

related_post