தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்.. மாஸ் டைட்டில்..!

தனுஷ் நடிக்கும் 50வது திரைப்படத்தை அவரே இயக்கினார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டரில் இந்த படத்தின் டைட்டில் ’ராயன்’ என்று வைக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். இந்த படம் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மூன்று மொழிகளிலும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகி உள்ளது.
வடசென்னையை மையமாக கொண்ட கதையம்சத்தில் உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று வெளியாகி உள்ள ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் தனுஷின் மிரட்டலான லுக் ரசிகர்களை கவர்ந்துள்ளது

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description