தடுப்பூசி போடாத வியாபாரிகளுக்கு கோயம்பேடு சந்தையில் அனுமதி இல்லை ..!

தமிழகத்தில் உச்சத்தில் இருந்த தினசரி கொரோனா பாதிப்பு தற்போது படிபடியாக குறையத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து கடந்த இரண்டு வாரங்களாக அமலில் இருந்த தளர்வற்ற ஊரடங்கில் சிறிது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து காய்கறி வியாபாரிகள் மீண்டும் விற்பனை செய்யஉள்ளதால் உற்சாகமடைந்துள்ளனர். இந்த நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் வியாபாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
சென்னை கோயம்பேட்டில் வியாபாரிகள் உட்பட 6,340 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அடுத்த 10 நாட்களில் கொரோனா தடுப்பூசி போடாத வியாபாரிகள் கோயம்பேடு சந்தையில் அனுமதிக்கப்படமாட்டார்கள். அனைத்து வியாபாரிகளுக்கும் கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்கப்படும் என கூறினார்.
மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் வியாபாரம் முடிந்த பின் கோயம்பேடு சந்தையில் தூய்மைப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது எனவும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description