டைனோசர் முட்டை... சிம்பு பட பாடல்.! அதிரடியில் மட்டும் அல்ல ஹுமரிலும் டாப் தான்! 'அயலான்' டீசர் வெளியானது!
இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அயலான்'. வேற்றுகிரக வாசியை மையமாக வைத்து, எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைத்துவிட்ட நிலையில், போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது.
VFX மற்றும் கிராபிக் பணிகள் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி, தொடர்ந்து தாமதமாகிக்கொண்டே சென்ற நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் குறித்து பலமுறை அறிவிப்பு வெளியாகியும் படம் திரைக்கு வராமல் தள்ளிக்கொண்டே சென்றது.
ஆனால் தற்போது படக்குழு, அயலான் படத்தை... பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வேற்றுகிரக வாசி, பூமியை காப்பாற்ற வருவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதிலும் அயலானை டீ போட சொல்வது, டவுசர், பனியன் மாட்டிவிட்டு அதனுடன் டான்ஸ் ஆடுவது போன்ற காட்சிகள் செம்ம மாஸ்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description