டுவிட்டரில் விரைவில் ஸ்வைப் செய்யும் அம்சம்! எலான் மஸ்கின் அடுத்த அப்டேட்!

எலான் மஸ்க் டுவிட்டரை கைப்பற்றியதும் பல்வேறு மாற்றங்களையும், அம்சங்களையும் செய்து வருகிறார். பல முக்கிய UI மாற்றங்கள் இந்த ஜனவரியில் வரும் என்றும் கூறி வருகிறார். ஏற்கெனவே தற்போது உலகளவில் ட்வீட்களுக்கான வியூ கவுண்ட் அம்சத்தை வெளியிட்டது, பெரும்பாலான பயனர்கள் லைக். ரீட்வீட் ஏதும் செய்யாமல் வெறும் ட்வீட்டைப் படித்துவிட்டு செல்கின்றனர். அவ்வாறு எத்தனை பேர் ட்வீட்களை படிக்கின்றனர் என்பது குறித்து அறிவதற்காக இந்த View Count என்ற அம்சம் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய அம்சம் விரைவில் வர உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது டுவிட்டர் தளத்தை ஸ்வைப் செய்யும் அம்சம் ஆகும். இந்த அம்சம் டுவிட்டரில் மேல்பகுதியில் உள்ள மெனுக்களை அதாவது பரிந்துரைக்கப்பட்டவை, பின்பற்றப்படும் ட்வீட்கள், டிரெண்ட்கள், டாப்பிக்ஸ் போன்றவற்றை எளிதில் ஸ்வைப் செய்து படிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக எலான் மஸ்க் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, ‘இந்த ஜனவரி மாதத்தில் ஸ்வைப் ஆப்ஷன் கொண்டு வரப்படும். இதன் மூலம் recommended & followed tweets, trends, topics போன்றவற்றை ஸ்வைப் செய்து பார்த்துக்கொள்ளலாம். இதே போல் ஷேர் பட்டனில் புக்மார்க் வசதி கொண்டு வரப்படும். பயனர்கள் தங்களது புக் மார்க செய்யப்பட்ட ட்வீட்களைப் படித்துக்கொள்ளலாம்’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் ப்ளூ தளத்தில் சமீபத்தில் இரண்டு புதிய அம்சங்கள் பெற்றுள்ளது . வழக்கமான பயனர்களைக் காட்டிலும் பணம் செலுத்திய சந்தாதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், ட்விட்டர் புளூ சந்தாதாரர்கள் இப்போது 60 நிமிட முழு HD வீடியோக்களைப் பதிவேற்ற முடியும்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description