சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் எப்படி இருக்கு..!
சிவகார்த்திகேயன் பிரியங்கா இருவரும் நெல்சன் இயக்கத்தில் நடித்த டாக்டர் படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு இன்று வெளியாகியுள்ளது. ரசிகர்களின் ஆரவாரம், எஸ் கே ஃபேன்ஸ் ஒரு பக்கம் டாக்டர் படத்தைப்பற்றி பல கருத்துக்களை இணையதளங்களில் பதிவிட்டு பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கோலமாவு கோகிலா படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு படம் இந்த டாக்டர். அனிருத் இசையில் மிகவும் அற்புதமான பேக்ரவுண்ட் ஸ்கோர் மற்றும் துள்ளல் பாடல் என ரசிகர்களை மிகவும் எளிதாக பல்ஸ் தெரிந்து பக்காவாக திரைக்கதை அமைத்துள்ளார் நெல்சன்.
பள்ளிக்கூடம் செல்லும் சின்னஞ் சிறு குழந்தைகளை கடத்தி வியாபார ரீதியாக பெரிய அளவில் ஒரு மாபியா கும்பல் செயல்பட்டு வருவது தான் இந்த படத்தின் மையப்புள்ளி . டாக்ட்ர் சிவகார்த்தியேன் இந்த சைல்ட் ட்ராபிக்கிங் செய்யும் கயவர்களை எப்படி கையாளுகிறார் என்ன என்ன விதத்தில் ஆபரேஷன் செய்கிறார் என்பது தான் ஒட்டு மொத்த கதை .
பேசி காமெடி பண்ணுவதை படத்தின் முதல் பாதி நான் ஸ்டாப் ஹுமர்,ரசிகர்கள் பலரும் தியேட்டரில் விழுந்து விழுந்து சிரிக்க காட்சிக்கு காட்சி ஃபுல் ஆப் ஃபன்.யோகிபாபு இந்த படத்தின் மிக பெரிய பிளஸ்,டயலாக் பேசி காமெடி பண்ணுவதை விட எஸ்பிரஷன்ஸ் மூலம் மிகவும் அசால்டாக அமளி துமளி செய்கிறார் .
ஈஸியாக சொல்லிவிட ஒரு மிலிட்டரி டாக்டராக முதல் காட்சியில் வரும் சிவகார்த்திகேயன் சீரியஸ் காட்சிகளிலும் காமெடி காட்சிகளிலும் நன்கு உணர்ந்து மிகவும் அற்புதமாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் . படத்தின் எந்த காட்சியிலும் சிரிப்பை வெளிப்படுத்தாமல் கிளைமாக்ஸ் வரை சீரியசாக முகத்தை வைத்து கொண்டு அனைவரையும் சிரிக்க வைத்தது சூப்பரான சாமர்த்தியம் . டார்க் காமெடி என்று ஈஸியாக சொல்லிவிட முடியும் ஆனால் அதை புரிதலுடன் அசுரத்தனமாக வெளிப்படுத்தி காட்சிகளாக கொண்டுவந்து சிறப்பாக வெற்றி பெற்று உள்ளார் இயக்குனர் நெல்சன் .
ரெடின் கிங்ஸ்லி சிவகார்த்திகேயனை தவிர்த்து பிரியங்கா மோகன்,அருண் அலெக்சாண்டர் அர்ச்சனா,ஜாரா, தீபா சங்கர் மிலிந்து சோமன், இளவரசு, போன்ற அனைவரும் தங்களுக்கு கொடுத்த வேலைகளை நன்கு புரிந்து கச்சிதமாக நடித்து கொடுத்து இருக்கின்றனர்.குறிப்பாக ரெடின் கிங்ஸ்லி மற்றும் யோகி பாபு கொடுக்கும் அலப்பறைகள் ஏகப்பட்ட கைதட்டல்களை வாங்கி கொடுத்து உள்ளது.
நேரம் இல்லாதபடி படத்தின் முதல் பாதியில் இருக்கும் அத்தனை சுவாரசியங்களும் இன்டர்வல் முடிந்த பிறகு இரண்டாம் பாதியில், கதையின் வேகத்தை கொஞ்சம் பட்டி பார்க்கிறது . ஒருவழியாக குழப்பங்கள் ஏதும் வராமல் சரியான நேரத்தில் திரைக்கதையில் அதிக ட்விஸ்ட் வைக்காமல் படத்தை சீக்கிரம் முடித்து விட்டனர். நிறைய லாஜிக் மீறல்கள் இரண்டாம் பாதியில் இருப்பதுதான் மிகப்பெரிய மைனஸ் .ஆனாலும்கூட அந்த மைனஸ் அனைத்தையும் நோண்டி பார்க்க நேரம் இல்லாதபடி அடுத்தடுத்த காட்சிகள் மூலம் கிளைமாக்ஸ் நோக்கி திரைக்கதையை நகர்த்தி தொய்வு அடையாமல் பார்த்துக் கொண்டனர்.
திரைக்கதை ஸ்டைல் படம் பார்த்து வெளியே வந்த பிறகு எந்தவிதமான காமெடி காட்சியோ அல்லது பஞ்ச் டயலாக் எதுவும் மனதில் நிற்காது .பரபரப்பாக சென்ற காமெடி காட்சிகள் கதையோடு ஒட்டி சென்ற டார்க் காமெடி திரைக்கதை ஸ்டைல் நம்மை ரசிக்க வைத்தாலும் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது . பார்த்தோம் ரசித்தோம் என்று சொல்லிவிட்டு அடுத்த வேலையை பார்க்க நம் மனது ஓடிவிடும். அப்படிப்பட்ட திரைக்கதைதான் டாக்டர் திரைப்படம்.
லாஜிக் மீறல்கள் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு தியேட்டர் சென்று குடும்பத்துடன் பார்த்து மகிழ டாக்டர் திரைப்படம் ஒரு பக்கா கமர்சியல் என்டர்டைன்மென்ட் தான். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இரண்டாம் பாதியும் லாஜிக் மீறல்கள் இல்லாமல் தூள் கிளப்பி இருந்தால் இந்த ஆண்டின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.ஓடிடி யில் வெளியிடாமல் தியேட்டரில் வெளியிட்டது படத்தின் குழு எடுத்த ஒரு நல்ல முடிவு.
டைம்பாஸ் செய்துவிட்டு படத்தின் பல முக்கியமான சீரியஸான காட்சிகளில் கூட காமெடி விஷயங்களை சொருகி அனைவரையும் சிரிக்க வைத்தது போல் மக்கள் மனநிலையை புரிந்துகொண்டு பல இன்னல்கள் நடுவே தியேட்டரில் ரிலீஸ் ஆன ஒரு ஜாலியான காமெடி படம் டாக்டர். குடும்பத்துடன் சென்று டைம்பாஸ் செய்துவிட்டு பெரிய மெசேஜ் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் -எதிர்பார்க்காமல் பொழுதுபோக்காக மட்டுமே இந்த படத்தை நன்கு அனுபவிக்கலாம்.