dark_mode
Image
  • Saturday, 10 January 2026

சில வியப்பூட்டும் தகவல்கள்..!

சில வியப்பூட்டும் தகவல்கள்..!

லெதர்.. சப்பாத்திகள்ளி செடியில் இருந்து எதற்காக தயார் செய்தார்கள்..?

லெதரை எதற்காக சப்பாத்திகள்ளி செடியில் இருந்து தயார் செய்தார்கள் என்றால் நமது அன்றாட தேவைகளில் லெதர் தேவை என்பதால் அதிக அளவிலான விலங்குகளை கொல்வதை தவிர்ப்பதற்காகத்தான்.

ஒரு மரத்தில் இருந்து எவ்வளவு ஆக்சிஜன் கிடைக்கும் என்று தெரியுமா..?

மரத்தில் இருந்து ஆக்சிஜன் கிடைக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. மேலும் ஒரு மரத்தில் இருந்து நான்கு நபர்கள் கொண்ட குடும்பத்திற்கு ஒரு வருடம் முழுவதும் அக்குடும்பத்திற்கு போதுமான அளவு ஆக்சிஜன் கொடுக்க முடியும்.

வெயில் காலத்தில் ஏன் நீண்ட நேரம் பகல் காலம் அதிகமாக இருக்கிறது என்று தெரியுமா..?

பூமி, சூரியனை சுற்றி வரும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் பூமி ஏப்ரல் மாதத்தைவிட செப்டம்பர் மாதத்தில் அதிகமாக சுற்றி வருகின்றது. அதனால்தான் வெயில் காலத்தில் நீண்ட நேரம் பகல் காலம் இருக்கின்றது. பூமியின் நிலப்பரப்பு வெப்பமாக இருந்தால் பூமி மெதுவாக சுற்றும். குளிர்ச்சியாக இருந்தால் பூமி வேகமாக சுற்றும். இதனால்தான் குளிர்காலங்களில் பகல் காலம் குறைவாக இருக்கின்றது.

பாண்டா விலங்கிற்கு பிடித்தமான உணவு என்ன..?

பாண்டா விலங்கு பற்றி பலர் அறிந்திருப்பார்கள். அதற்கு பிடித்த உணவு மூங்கில் மரம்தான். மேலும் இதில் அதிசயமான உண்மை என்னவென்றால், ஒரு நாளைக்கு 39 கிலோ எடை கொண்ட மூங்கில் மரங்களை ஒரு பாண்டா உணவாக உட்கொள்ள முடியும்.

கண் இமையை எத்தனை வினாடிக்கு ஒருமுறை இமைப்போம்..?

கண் இமையை 7 வினாடிக்கு ஒருமுறை இமைத்து விடுவோம். அப்படி இமைக்காவிட்டால் நமது கண்ணில் தூசி, அழுக்கு போன்றவை கண்ணிற்குள் சென்று கண்ணில் உள்ள ஈரப்பதம் குறைந்துவிடும். இவற்றை தவிர்த்து ஈரப்பதத்தை அதிகரிக்க கண்களை இமைக்கின்றோம்.

புத்தகத்தில் ஏன் இருபுறமும் Margin இருக்குனு தெரியுமா..?

எலிகள் தான்.. புத்தகத்தில் Margin விட காரணமாம். ஏனென்றால் எலிகள் புத்தகங்களின் ஓரத்தை கடித்துவிடும். அப்போது புத்தகத்தில் வலது புறம் இருக்கும் வார்த்தைகள் கிழிந்து போகவோ, மறைந்து போகவோ வாய்ப்புகள் அதிகம். அதனால் தான் வலது பக்கம் Margin விடப்படுகிறது. ஆனால் இடது பக்கத்தில் புத்தகத்தை பிணைக்கும்போது வார்த்தைகள் மேல் படாமல் இருக்க இடது பக்கம் Margin விடப்படுகிறது.

சில வியப்பூட்டும் தகவல்கள்..!