உங்கள் வாழ்க்கையிலிருந்து நீங்கள் வெளியேற்ற வேண்டிய நபர்கள் யார்..?
உங்கள் வாழ்க்கையில் உள்ளவர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று கூறிவிட முடியாது. சில தீய எண்ணங்களுடன் உங்கள் அருகிலேயே இருப்பார்கள். நீங்கள் நினைத்துக்கூட பார்க்காத வழிகளில் அவை உங்களை பாதிக்கும். எதிர்மறையான நோக்கங்களைக் கொண்ட இத்தகைய நபர்கள் தான் உங்கள் மனதில் தீய எண்ணங்களை விதைப்பார்கள். எனவே, நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், அவர்களை உங்கள் வாழ்க்கையில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்பதுதான்.
பொய் கூறுபவர்கள் :
பொய் கூறுபவர்கள் பேசுவது முதலில் அழகாகத் தோன்றலாம், ஆனால் நம்பிக்கை மற்றும் அன்பு என்று வரும்போது அவர்கள் ஒரு மாயை என நீங்கள் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாத வழிகளில் அவர்கள் உங்களை கையாள முயற்சிப்பார்கள், இறுதியில் உங்களை ஏமாற்றி விடுவார்கள். ஏனெனில் அவர்கள் நல்ல பொய்யர்கள் மற்றும் அவர்களின் இமேஜை பராமரிக்க எதையும் செய்வார்கள்.
வதந்தியை பரப்புபவர்கள் :
சிலர் எப்போதும் கிசுகிசுக்க விரும்புவர் மற்றும் மக்களை பற்றிய வதந்திகளை பரப்பி கொண்டிருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் அதை விரும்புவார்கள். ஆனால் இப்படி பட்டவர்களுடன் நீங்கள் பழகுவதை தவிர்து விடுங்கள். ஏனெனில் மற்றவர்களை பற்றி உங்களிடம் கூறுபவர்கள், பின்னாளில் உங்கள் குறித்தும் வதந்திகளை பரப்ப யோசிக்க மாட்டார்கள்.
தீங்கு செய்பவர்கள்
ஒரு நபர் மீண்டும் மீண்டும் மீண்டும் உங்களுக்கு தீங்கு செய்பவர் என்றால் அவர்களிடம் இருந்து தூரமாகவே இருங்கள். ஏனெனில் அவர்களுக்கு ஆதரவளிப்பது உங்கள் மன ஆரோக்கியத்தை பாதிக்கும்.. ஒரு முறை உங்களுக்கு தீங்கு விளைவிக்கிறார் என தெரிந்தால் அவர்களிடமிருந்து சிறிது நேரம் விலகி இருக்க வேண்டும்.
உணர்ச்சி ரீதியாக ஒட்டிக்கொண்டவர்கள்
இந்த நபர்கள் உங்களை உணர்ச்சிவசமாக ஒட்டிக்கொள்வார்கள். அவர்களுக்கு தேவையான நேரத்தில் உங்களை பயன்படுத்திய பின்னர் உங்களை விட்டு விலகி விடுவார்கள். அவர்கள் எப்போதும் மக்களிடமிருந்து ஒரு வித பலனை விரும்புகிறார்கள், மேலும் உணர்ச்சிபூர்வமான நிறைவேற்றத்திற்காக மற்றவர்களுடன் ஒட்டிக்கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் வசதிக்கேற்ப தங்கள் அணுகுமுறையையும் மாற்ற முனைகிறார்கள். இத்தகைய நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.
குற்றம் சாட்டுபவர்கள்
சிலர் தாங்கள் செய்த குற்றத்தை பிறர் மீது கூறிவிடுவார்கள். கடினமான சூழ்நிலையிலிருந்து எளிதில் வெளியேற இப்படி செய்வார்கள். அவர்கள் ஒருபோதும் தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ள மாட்டார்கள், அதற்கு பதிலாக, அவர்கள் அனைவரையும் குற்றம் சாட்டுவார்கள், அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
செல்வாக்கு மிக்கவர்கள்
செல்வாக்கு மிக்கவர்கள் ஒவ்வொரு குழுவிலும் ஒருவர் இருப்பார். அவர் எல்லா வகையான மோசமான செயல்களிலும் ஈடுபடுவார், அது மற்றவர்களை சிக்கலில் சிக்க வைக்கும். பல பிரச்சனைகளுக்கு பிறகும், அவர்கள் அதில் மிகுந்த திருப்தியையும், மகிழ்ச்சியையும் காணும் என்பதால் அவர்கள் நிறுத்த மாட்டார்கள். எனவே அத்தகைய நபர்களிடமிருந்து உங்களைப் பிரித்துக் கொள்ள வேண்டும்.