dark_mode
Image
  • Tuesday, 24 March 2026

சாதனைக்கு சாதனை சேர்த்த நரேந்திர மோடி – 24 ஆண்டுகள் ‘On Duty’

சாதனைக்கு சாதனை சேர்த்த நரேந்திர மோடி – 24 ஆண்டுகள் ‘On Duty’

நரேந்திர மோடி – 8,931 நாட்கள் சாதனை: நீண்ட காலம் பதவி வகித்த தலைவராக புதிய வரலாறு

இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவி வகித்து வரும் நரேந்திர மோடி, அரசியல் வரலாற்றில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளார். நாட்டின் நிர்வாகத் தலைவராக மிக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இதற்கு முன்பு பவன் குமார் சாம்லிங் 1994 முதல் 2019 வரை 8,930 நாட்கள் சிக்கிம் மாநில முதல்வராக இருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை 8,931 நாட்களுடன் நரேந்திர மோடி முறியடித்துள்ளார்.

2001 ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி குஜராத் மாநில முதல்வராக தனது அரசியல் நிர்வாகப் பயணத்தைத் தொடங்கிய மோடி, பின்னர் 2014 மே 26 முதல் இந்தியாவின் பிரதமராக பணியாற்றி வருகிறார். இவ்விரு பதவிகளையும் சேர்த்து கணக்கிடும் போது, 24 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மக்கள் தேர்ந்தெடுத்த தலைவராக அவர் உள்ளார்.

குஜராத் முதல்வராக 12 ஆண்டுகளுக்கும் மேலாகவும், அதன் பின்னர் பிரதமராக 10 ஆண்டுகளுக்கும் மேலாகவும் பதவி வகித்து வரும் அவர், இடைவெளி இல்லாத நீண்ட கால சேவையால் இந்த சாதனையை எட்டியுள்ளார்.

மேலும், 2024 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றது, இந்த மைல்கல்லை அடைய முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

நீண்ட காலம் பதவி வகித்ததோடு மட்டுமல்லாமல், தனது பொறுப்பில் இருக்கும் காலத்தில் ஒரு நாளும் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பணியாற்றியதும், அவரது அரசியல் பயணத்தில் குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது.

related_post