கேரளா : ஒரே நாளில் 17,481 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் பாதித்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், அம்மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 17,481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கேரளாவில் இதுவரை தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 32,04,697 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒருநாளில் மட்டும் 105 பேர் உயிரிழந்தனர், இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 15,617 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புக்கு தற்போது 1,29,640 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று 14,131 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 30,59,441 ஆக உயர்ந்துள்ளது என்று கேரளா அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவில் இதுவரை ஒரு கோடியே 70 லட்சத்து 59 ஆயிரத்து 082 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description