dark_mode
Image
  • Friday, 04 July 2025

கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீ; 4 பேர் பலி; விசாரணைக்கு உத்தரவு

கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீ; 4 பேர் பலி; விசாரணைக்கு உத்தரவு

திருவனந்தபுரம்: கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தால் ஏற்பட்ட புகைமூட்டத்தில் மூச்சு திணறி 4 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். 

கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் மின்கசிவு காரணமாக நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனை முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்தது. இதனால் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் மூச்சுதிணறி உயிரிழந்தனர்.

மேலும் சிகிச்சை பெற்று வந்த 200க்கும் மேற்பட்டோர் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இது குறித்து எம்.எல்.ஏ., சித்திக் கூறியதாவது: தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துவமனையில் னென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட கல்பேட்டா மெப்படி பகுதியை சேர்ந்த நசீரா,24, உயிரிழந்தார்.

மருத்துவமனையில் தீ விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் பணி நடக்கிறது, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

related_post