குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியீடு!

குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலை தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், துணைப் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தனிப்பிரிவு அலுவலர், உதவிப் பிரிவு அலுவலர், வனவர் என 507 குரூப் 2 பணியிடங்கள் மற்றும் மேலாண்மை இயக்குநரின் நேர்முக உதவியாளர், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், மேற்பார்வையாளர், இளநிலைக் கண்காணிப்பாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,820 குரூப் 2 A பணியிடங்கள் என்று 2,327 இடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2ஏ முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி ஜூன் 20ம் தேதி வெளியிட்டது.
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்வு கடந்த 14ம் தேதி நடைபெற்றது. இதில், குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வை 38 மாவட்டங்களில் 2,763 தேர்வு மையங்களில் 7,93, 966 பேர் எழுதினர். சமீபத்தில், குரூப்-2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைகுறியீடுகளை டி.என்.பி.எஸ்.சி.https://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டது.
இந்த தேர்வுக்கான முடிவுகள் உத்தேசமாக வருகிற டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description