குமரி மாவட்டம் : முதல்வருக்கு திரள் விண்ணப்பம் அனுப்பிய குடியிருப்பு வாசிகள்
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியை சார்ந்த கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட 1 வது வார்டில் உள்ள ஏலாக்கரை பாணந்தோப்பு சாலையில் சுமார் இரண்டு வார காலமாக மழை நீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது இது ஒவ்வொரு பருவமழைக்கும் இதே நிலைமை நீடித்துக் கொண்டுதான் செல்கிறது இதனால் இதனை சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகள் தங்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றித் தரும் வகையில் முதல்வருக்கு திரள் மனு அனுப்பி உள்ளனர்.
மனுவில் குறிப்பிட்டுள்ளது:
மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசி தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாலும் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது பள்ளி கல்லூரிக்கு செல்கின்ற மாணவர்களும் குடியிருப்பு வாசிகளும் வயது முதியோர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ள நிலையில் பலமுறை அரசியல் தலைவர்களையும் அரசு அதிகாரிகளை நேரில் சந்தித்து சில ஆண்டுகளாக முறையிட்டும் தீர்வு எட்டப்படாத நிலையில் உள்ளது.
இதனால் ஏலாக்கரை பாணந்தோப்பு செல்கின்ற சாலையின் இரண்டு புறமும் உள்ள குடியிருப்பு வாசிகள் அனைவரும் இணைந்து தங்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு கொல்லங்கோடு நகராட்சி ஆணையர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர், பத்மனாபபுரம் சார் ஆட்சியர், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர், தமிழக முதலமைச்சர் ஆகியோருக்கு மக்கள் திரள் மனு அனுப்பி உள்ளனர்.