அய்யம்பேட்டையில் சமூக நீதி நற்பணி மன்றம் (SNM) சார்பாக ரமலான் இப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அய்யம்பேட்டை சக்கராப்பள்ளியில், சமூக நீதி நற்பணி மன்றம் (SNM) சார்பாக ரமலான் இப்தார் நிகழ்ச்சி அஞ்சுமன் மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் உலக அமைதி, சகோதரத்துவம் மற்றும் சமூக ஒற்றுமைக்காக சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட இமாம்கள், ஜமாத்தார்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், குழந்தைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
நோன்பு வைத்துள்ளவர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டன. இஸ்லாமிய அறிஞர்கள் நோன்பின் முக்கியத்துவம், அதன் ஆன்மீக அர்த்தம் மற்றும் உலக அமைதி குறித்து உரையாற்றினர். மத நல்லிணக்கம், சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில், பிற மதத்தினரும் இதில் பங்கேற்றனர். இது சமுதாய ஒற்றுமைக்கான சிறந்த எடுத்துக்காட்டு என பலரும் பாராட்டினர்.
இந்நிகழ்ச்சியில் ஜமாத் சபை நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், மன்ற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சமூக நீதி நற்பணி மன்றத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் பொருளாதாரம் வழங்கிய நல் உள்ளங்களுக்கு நன்றியை தெரிவித்தனர்.
இந்நிகழ்வு மத நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். நிகழ்வு இறை பிரார்த்தனையுடன் நிறைவு பெற்றது.



comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description