குமரி மாவட்டத்தின் சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.2000 கோடி ஒதுக்குங்கள்: பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை

இயற்கை எழில் நிறைந்த கன்னியாகுமரி மாவட்டத்தை உலகின் தலை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றிட மத்திய அரசு முன் வரவேண்டும். அதற்காக சிறப்பு நிதியாக ரூபாய் 2000 கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளர். மக்களவையில் 377 ஆம் விதியின் கீழ் இந்த முக்கியமான கோரிக்கையை வைத்த விஜய் வசந்த் எம்.பி கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டம். மிக தெளிவான கடற்கரைகள், விண்ணை எட்டி நிற்கும் மலைகள், அருவிகள், நீர் நிலைகள் என்று கண் கவர் இயற்கை எழிலை கொண்டது எங்கள் மாவட்டம். விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டி பாலம், பத்மநாபபுரம் அரண்மனை போன்ற உலக புகழ் வாய்ந்த சுற்றுலா மையங்கள் இங்குள்ளது. கடந்த வருடம் மட்டும் 2 லட்சத்திற்கு மேற்பட்ட உள்நாட்டு சுற்றுலா பயணிகளும், சுமார்
50, 000 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் குமரிக்கு வருகை தந்துள்ளனர். ஆனால் இத்தகைய பெரும் கூட்டத்தினை எதிர் கொள்வதற்கான அடிப்படை கட்டமைப்பு இல்லாமல் இங்குள்ள சுற்றுலா தலங்கள் காணப்படுகின்றன. மேலும் சுற்றுசூழலை மேம்படுத்தவும், பாரம்பரிய மற்றும் இயற்கை தளங்களை பாதுகாக்கவும் வேண்டியது கட்டாயம்.
கன்னியாகுமரி மாவட்டம் மேம்படுத்தப்பட்ட ஒரு சுற்றுலா தலமாக மாறுவதன் மூலம் இங்குள்ள மக்களும், சிறு குறு வணிகர்களும் பயனடைந்து, வேலை வாய்ப்பினையும் பெருக்க இது காரணமாக அமையும். இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு கன்னியாகுமரியின் சுற்றுலா தலங்களை மேம்படுத்த ப்ரேத்யேக கவனத்தை செலுத்த வேண்டும். மேலும் இதற்காக ரூபாய் 2000 கோடியினை சிறப்பு நிதியாக ஒதுக்கி உலக சுற்றுலா வரைபடத்தில் குமரியை இடம் பெற செய்ய ஆவன செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
செய்தியாளர்.மு.கார்த்திக் புதிய தலைமைச் செய்தி
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description