dark_mode
Image
  • Friday, 04 April 2025

பத்து ரூபாய் கையெழுத்து கொள்ளையில் சிக்காத சில்வண்டுகள்* 

பத்து ரூபாய் கையெழுத்து கொள்ளையில் சிக்காத சில்வண்டுகள்* 

குமரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் கையெழுத்தை போலியாக போட்டு லட்சக்கணக்கான மாணவர்களிடம் ரூபாய் 10 வசூலித்து கோடிகளை சுருட்டிய பலே ஆசாமிகள் அருகில் இருந்தும் அவர்களை பிடித்து தண்டனை கொடுக்க முடியாமல் திணறுகிறதா மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும்?

 

 ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் என்பது கவிஞர் வாலியின் வரிகள். ஆனால் குமரி மாவட்டத்தில் தேவனின் அருளாசியுடன் ஜகத் ஜால கில்லாடிகள், பத்து ரூபாய் கொள்ளையை முத்தாக கையப்பமிட்டு முடித்துக் காட்டி இருக்கிறார்கள்.

 இவர்களைப் கண்டறிய ஏற்படும் தடங்கலைப் பார்க்கும்போது இவர்கள் கனிவுடன் பாதுகாக்கப்படுகிறார்களோ? என்ற சந்தேகம் எழுவதாகவே தோன்றுகிறது.

 

விண்வெளியில் ஆய்வுப் பணிக்காக சென்றவர்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பூமிக்கு திரும்ப முடியாமல் இருந்து வந்த நிலையில் அவர்களை மீட்டு பூமிக்கு கொண்டு வரும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

 

 ஆனால் குமரி மாவட்டத்தில் அனைத்து தொழில்நுட்பத்தையும் தவறாகவே பயன்படுத்தி பல கோடிகளை சுருட்டிவிட்டு கண்ணாமூச்சி விளையாட்டு காட்டும் செய்தி மக்கள் மத்தியில் மாவட்ட நிர்வாகத்தின் மீது உள்ள நம்பிக்கையை சீர்குலைக்கிறது என சராமரி குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது.

 வேகம் காட்டுவார்களா மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு???

 

செய்தியாளர்.மு.கார்த்திக் புதிய தலைமைச் செய்தி

comment / reply_from

related_post