கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் மகாபலிபுரத்தில் சந்திக்க காரணம் என்ன?
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மகாபலிபுரத்தில் வைத்து சந்திக்க என்ன காரணம் என்பது தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது .
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் திங்கட்கிழமை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. முதலில் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று சந்திக்க திட்டமிட்ட விஜய், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும், கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும் கரூரில் உள்ள ஒரு மண்டபத்தில் அனைவரையும் சந்திக்க முடிவு செய்தார்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படலாம்
முதலில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்திப்பதாக நடிகர் விஜய் திட்டமிட்டிருந்ததால் சாலை மார்க்கமாகச் செல்லும்போது கூட்டம் கூடும் வாய்ப்பு இருப்பதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படலாம் என்றும் பலரும் தெரிவித்தனர்.