dark_mode
Image
  • Tuesday, 24 February 2026

விஜய் குறித்து பேசி அவரை பெரிய ஆளாக்க விரும்பவில்லை : பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

விஜய் குறித்து பேசி அவரை பெரிய ஆளாக்க விரும்பவில்லை : பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்திருக்கிறார். அப்போது தொகுதி பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தைகள் துவங்கியதா ? என்பது பற்றி பேசினார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, அமமுக உட்பட பல காட்சிகள் இருக்கின்றன. இதில் எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து இன்னும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்றே தெரிகின்றது.

ஆனால் யாருக்கு அதிகமான தொகுதிகள் வழங்கப்படும், யாராருக்கு எந்தெந்த தொகுதிகள் கிடைக்கும் என்பது போன்ற பல யூகங்கள் இருக்கின்றன. இதுகுறித்து நயினார் நாகேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, இன்னும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை துவங்கவில்லை. அதிமுகவுடன் இன்னும் தொகுதிப்பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என கூறினார் நயினார் நாகேந்திரன்.

பேச்சுவார்த்தை துவங்கி இறுதி முடிவு எட்டப்பட்டதும் உங்களுக்கு நான் தெரியப்படுத்துகிறேன் என கூறினார். மேலும் விஜய் குறித்தும் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதாவது விஜய் தொடர்ந்து திமுக மற்றும் தவெக இடையேதான் போட்டி என சொல்லிக்கொண்டு இருப்பது குறித்து நயினார் நாகேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நயினார் நாகேந்திரன், நான் விஜய் பற்றி பேசி அவரை பெரியாளாக்க விரும்பவில்லை என கூறிவிட்டார்.

அதன் பிறகு அவர் விஜய் குறித்து எந்த ஒரு கருத்தையும் பேசவில்லை. இப்படி தான் கடந்த வாரம் நயினார் நாகேந்திரன் விஜய் குறித்து சர்ச்சையாக பேசியது மிகப்பெரிய அளவில் கண்டனத்திற்கு உண்டானது. விஜய்யையும் நடிகை த்ரிஷாவையும் பற்றி நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையானது. நயினார் நாகேந்திரன் தன் சர்ச்சையான பேச்சிற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது வருத்தம் தெரிவிக்க வேண்டும் என பலர் கண்டனங்களை தெரிவித்தனர்.

நடிகை த்ரிஷாவும் நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சை கண்டித்து அறிக்கை வெளியிட்டார். அதன் பிறகு நயினார் நாகேந்திரன் தன் பேச்சு குறித்து வருத்தம் தெரிவித்தார். அதன் பிறகு தற்போது செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரனிடம் மீண்டும் விஜய் குறித்து கருத்து கேட்கப்பட்டது. ஆனால் இம்முறை விஜய் குறித்து நான் எந்த கருத்தையும் கூற போவதில்லை என்ற முடிவை நயினார் நாகேந்திரன் எடுத்துவிட்டதாக தெரிகின்றது.

 

அதன் காரணமாக தான் விஜய் பற்றி பேசி அவரை பெரியாளாக்க விரும்பவில்லை என கூறிவிட்டார் நயினார் நாகேந்திரன். இந்நிலையில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் குறித்து பேசிய நயினார் நாகேந்திரன் திமுக அரசு குறித்தும் கடுமையாக விமர்சித்து பேசினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக ஆட்சியில் பல தவறுகளை செய்திருக்கின்றனர். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போய்விட்டது. சொன்ன வாக்குறுதிகளை அவர்கள் காப்பாற்றவில்லை, செய்துகொடுக்கவில்லை.

மின்சார கட்டணம், சொத்து வரி என அனைத்தும் உயர்ந்துவிட்டது. எந்த ஒரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் இருப்பது தான் திமுக அரசு. தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றிவிட்டனர். எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று தமிழகத்தில் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வராக பதவியேற்பார். தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும் என பேசினார் நயினார் நாகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

related_post