dark_mode
Image
  • Friday, 29 November 2024

கன்னியாகுமரி நான்கு வழி சாலை ரவுண்டானாவில் ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் 150 அடி உயர கோடி கம்பத்தில் தேசிய கொடி இன்று பறக்க விடப்பட்டது-

கன்னியாகுமரி நான்கு வழி சாலை ரவுண்டானாவில் ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் 150 அடி உயர கோடி கம்பத்தில் தேசிய கொடி இன்று பறக்க விடப்பட்டது-
கன்னியாகுமரி மகாதானபுரம் நான்குவழிசாலை ரவுண்டானாவில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 150 அடி உயர தேசிய கொடிகம்பம் நிறுவப்படும் என மாநிலங்களவை எம். பி விஜயகுமார் தனது தொகுதி மேம்பாட்டி நிதியில் இருந்து நிதி ஒதுக்கி பணியை தொடங்கி வைத்தார், அதனை தொடர்ந்து தீவிரமாக பணி நடைபெற்றுவந்தது.
நாட்டின் எல்லைகள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், முக்கிய சுற்றுலா தலங்கள், ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் உயரமான தேசிய கொடிகம்பம் அமைக்கப்பட்டுள்ளது, ஆனால் நாட்டின் தென்எல்லையாகவும், சர்வதேச சுற்றுலா தலமாகவும் விளங்கும் கன்னியாகுமரியில் நான்கு வழிசாலை 150 அடி தேசிய கொடிக்கம்பம் இதுவே தென் மாநிலங்களில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது, முதலில் கன்னியாகுமரி ஸீரோபாயின்ட் பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் ஸீரோ பாயிண்ட் பகுதியில் அமைப்பதற்கு பதிலாக மகாதானபுரம் நான்குவழிசாலை ரவுண்டானாவில் நிறுவ முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் கடந்த ஒரு மாதமாக நடந்துவந்தது.
தற்போது கொடிகம்பம் நிறுவும் பணி நிறைவடைந்தது.
கொடிமரத்தின் மேல்பகுதியில் சிவப்பு எச்சரிக்கை விளக்கு, தேசிய கொடி ஏற்றும் இரும்பு ரோப் போன்றவை பொருத்தும் பணியில் ஊழியர்கள் கடந்த நாட்களாக ஈடுபட்டுள்ளனர். இந்த கொடிகம்பம் ராட்சத கிரேன் உதவியுடன் நிறுவப்பட்டது. மேலும் இன்று நாற்பத்தி எட்டு அடி நீளத்திலும், 38 அடி அகலத்திலும் மூவர்ண தேசியக்கொடி துணியால் அமைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த கொடி கோடியானது 150 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பத்தில் இன்று பறக்கவிடப்பட்டது. இதனை தமிழக தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாநிலங்களவை எம்பி விஜயகுமார், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பொத்தானை அழுத்தி தேசிய கொடியை பறக்க விட்டனர், மேலும் இந் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்தும் தேசியக் கொடி ஏற்றும்போது மரியாதை செலுத்தினர்.
கன்னியாகுமரி நான்கு வழி சாலை ரவுண்டானாவில் ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் 150 அடி உயர கோடி கம்பத்தில் தேசிய கொடி இன்று பறக்க விடப்பட்டது-

comment / reply_from

related_post

newsletter

newsletter_description