dark_mode
Image
  • Saturday, 26 April 2025

கசிந்த 'கேப்டன் மில்லர்' படத்தின் காட்சிகள்... படப்பிடிப்பு தளத்தில் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

கசிந்த 'கேப்டன் மில்லர்' படத்தின் காட்சிகள்... படப்பிடிப்பு தளத்தில் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

ராக்கி, சாணிக் காயிதம் படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மேலும் நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. கேப்டன் மில்லர் திரைப்படம் இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையிலான போரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஏராளமான துப்பாக்கி குண்டுகள் மற்றும் குண்டுவெடிப்புகளுடன் படக்குழு பெரிய அளவில் காட்சியை பதிவு செய்து வருவதாகவும் தகவல் வெளியானது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் உள்ள வனப்பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 'கேப்டன் மில்லர்' படத்தின் போர் தொடர்பான காட்சிகள் இணையத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் செல்போன், கேமரா உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கசிந்த 'கேப்டன் மில்லர்' படத்தின் காட்சிகள்... படப்பிடிப்பு தளத்தில் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

comment / reply_from

related_post