இனி நீண்ட கியூவில் காத்திருக்க வேண்டாம்.! சூப்பர் வசதியை அறிமுகம் செய்த சென்னை மெட்ரோ

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நெரிசல் மிகுந்த நேரங்களில் பயணிகளின் நுழைவு மற்றும் வெளியேற்றத்தை எளிதாக்குவதற்காக தானியங்கி கட்டண நுழைவுவாயிலில் புதிய நடைமுறை சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
Chennai Metro Rail Automated Entry gates : நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி உரிய நேரத்தில் உரிய இடங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் மக்களுக்கு மெட்ரோ ரயில் சேவை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. குறித்த நேரத்தில் உரிய இடத்தை சென்று சேர முடிகிறது.
இந்த நிலையில் மெட்ரோ ரயில் சேவையை அலுவலகத்திற்கு செல்லும் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதன் காரணமாக காலை மற்றும் மாலை நெரிசல் மிகுந்த நேரத்தில் தானியங்கி கட்டண நுழைவுவாயில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து உள்ளே செல்ல வேண்டியுள்ளது.
இதனால் குறிப்பிட்ட ரயிலை பிடிக்க முடியாமல் பயணிகள் சிரமப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு பீக் ஹவர்ஸ்சில் புதிய நடைமுறையை சோதனை முறையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஆயிரம் விளக்கு மெட்ரோ இரயில் நிலையத்தில் பயணிகளின் நுழைவு மற்றும் வெளியேற்றத்தை எளிதாக்குவதற்காக தானியங்கி கட்டண நுழைவுவாயிலில் ஒரு புதிய முறையை சோதனை அடிப்படையில் செயல்படுத்தியுள்ளது.
ஆயிரம் விளக்கு மெட்ரோ இரயில் நிலையத்தில் உள்ள அனைத்து தானியங்கி கட்டண நுழைவுவாயில்களும் காலை 08:00 மணி முதல் 11:00 மணி வரை மற்றும் மாலை 05:00 மணிமுதல் 08:00 மணி வரை “Normally Open” முறையில் செயல்படஉள்ளன. இந்த முயற்சி, நெரிசல் மிகு நேரங்களில் பயணத்தை எளிதாக்கவும், பயணிகள் நீண்ட வரிசையில் நிற்க்கும் நேரத்தை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டது. Normally Open முறையின் கீழ், தானியங்கி கட்டண நுழைவுவாயில்களின் கதவுகள் திறந்த நிலையில் இருக்கும்,
இதனால் பயணிகள் விரைவாகக் கடந்து செல்ல முடியும். எனினும், பயண கட்டண சரிபார்ப்பை உறுதி செய்யும் வகையில், பயணிகள் தங்கள் பயண அட்டை அல்லது QR பயணச்சீட்டை தானியங்கி கட்டண நுழைவுவாயில்களில் ஸ்கேன் செய்ய வேண்டும்.
i. பயணச்சீட்டு சரிபார்ப்பு வெற்றிகரமாக இருந்தால், பச்சைவிளக்கு தெரியும், மேலும் பயணிகள் தானியங்கி கட்டண நுழைவுவாயிலை கடந்து செல்லலாம்.
ii. சிவப்பு விளக்கு தெரிந்தால் அல்லது எந்த பதிலும் கிடைக்காவிட்டால், பயணிகள் மீண்டும் முயற்சிக்கவேண்டும் அல்லது பயணச்சீட்டு கவுண்டர்களில் பயணச்சீட்டை சரிபார்க்க வேண்டியது அவசியம்
iii. சரியான பயணச்சீட்டு இல்லாமல் நுழைய முயற்சித்தால், தானியங்கி கட்டண நுழைவுவாயில்களின் கணினி அமைப்பு தானாகவே கதவுகளை மூடிவிடும், அதனால் அங்கீகரிக்கப்படாத நுழைவு தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description