அப்பா வயதுடைய நபர் என்னிடம் தப்பா நடந்துக்கிட்டாரு- நடிகை

படப்பிடிப்புத் தளத்திற்கு சென்றதும், இயக்குநர் என்னை மேலே கூப்பிடுகிறார் எனக் கூறினார்கள்.
அஸ்வினி தற்பொழுது அமேசான் பிரைமில் வெளியான சுழல் 2 வெப் தொடரில் நடித்துள்ளார்.
கிழக்குச் சீமையிலே படத்தில் நடித்த நடிகையான அஸ்வினி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
அதாவது, " நான் எப்போதும் எனது அம்மாவுடன் தான் படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்வேன். அன்றைய தினம் என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் படப்பிடிப்பு தளத்திற்கு வரமுடியவில்லை.
இதனால் படப்பிடிப்புக்கு போகலாமா வேண்டாமா என நான் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் மேக்கப் போடுவதற்கு பெண் கலைஞர் இருந்ததால், எனது அம்மா என்னை படப்பிடிப்புக்கு போகச் சொன்னார்.
படப்பிடிப்புத் தளத்திற்கு சென்றதும், இயக்குநர் என்னை மேலே கூப்பிடுகிறார் எனக் கூறினார்கள். அப்போது கூட உள்ள பெண்ணை நீங்களும் வங்க மேலே செல்லலாம் என்று அழைத்தேன். அவர் நான் வர வில்லை நீ சென்றுவா என்றார்கள்.
எனக்கு அப்போது ரொம்பவும் சின்ன வயது என்பதால், என்னால் எதையும் வேறு ஒரு கோணத்தில் யோசிக்கும் தன்மை இல்லாமல் இருந்தேன்.
அதனால் மேலே சென்றேன். மேலே போனால் யாருமே இல்லை. ஒரு அறையில் இருந்து இயக்குநரின் குரல் கேட்டது. அவர் என்னை உள்ளே கூப்பிட்டார். நானும் எதுவும் யோசிக்காமல் சென்றுவிட்டேன். உள்ளே சென்ற பின்னர் அவர் என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டார். நான் இப்படி நடக்கும் என கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. அங்கிருந்து கீழே வந்த நான், உடனே வீட்டுக்கு வந்துவிட்டேன்.
நடந்ததை என் அம்மாவிடம் கூறினேன். அம்மா மனமுடைந்து அழுதார். இது மட்டும் இல்லாமல், எனக்கு அம்மாவிடம் இதை கூறி அவரைக் காயப்படுத்தி விட்டோமே என்ற எண்ணம் என்னை ரொம்பவும் கஷ்டப்படுத்தியது எனக் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த சம்பவம் எந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடைபெற்றது, யார் இவ்வாறு செய்தார் என பெயரைக் குறிப்பிடவில்லை. மேலும் அஸ்வினியிடம் தவறாக நடந்து கொண்டவர் யார் என்ற கேள்வியையும் எழுப்பி வருகிறார்கள்.
அஸ்வினி தற்பொழுது அமேசான் பிரைமில் வெளியான சுழல் 2 வெப் தொடரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
BY.PTS NEWS M.KARTHIK
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description