dark_mode
Image
  • Friday, 25 April 2025

அதானிக்கு எதிரான 'ஹிண்டன்பர்க்' அறிக்கை: ராகுலுக்கு தொடர்பா?

அதானிக்கு எதிரான 'ஹிண்டன்பர்க்' அறிக்கை: ராகுலுக்கு தொடர்பா?

புதுடில்லி : தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிராக, 'ஹிண்டன்பர்க்' அறிக்கை வெளியானதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற முதலீட்டு ஆய்வு அமைப்பு, 2023ல் அறிக்கை வெளியிட்டது. தொழிலதிபர் கவுதம் அதானியின் நிறுவனம், பங்குச் சந்தையில் மோசடி செய்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.

 

இது, நம் நாட்டின் பங்குச் சந்தையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும், கவுதம் அதானி மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அரசியல் ரீதியிலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், மேற்காசிய நாடான இஸ்ரேலின் உளவு அமைப்பான, 'மொசாட்' இந்த விவகாரம் தொடர்பான தகவல்களை சேகரித்துள்ளது.

காங்கிரஸ் வெளிநாட்டு பிரிவு தலைவரும், ராகுலின் ஆலோசகருமான ஷாம் பிட்ராடோவின், 'சர்வர்' எனப்படும் கம்ப்யூட்டர் தகவல் அமைப்பில் இருந்து மொசாட் தகவல்களை சேகரித்தது.

அதானி மற்றும் மோடிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், ஹிண்டன்பர்க் அறிக்கை தயாரிப்பதில், ராகுலுக்கு தொடர்பு இருப்பது தொடர்பான தகவல்கள் அதில் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து, ரஷ்யாவை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'ஸ்புட்னிக்' என்ற பத்திரிகையின் இந்திய பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இது குறித்து இஸ்ரேல், மொசாட் அமைப்புகள் எந்த கருத்தையும் வெளியிடவில்லை. காங்கிரஸ் கட்சியும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

comment / reply_from

related_post