கோவையில் ஏப்ரல் 26, 27ம் தேதி த.வெ.க. பூத் கமிட்டி கூட்டம் – தலைவர் விஜய் உரையாற்றுகிறார்

கோவையில் வரும் ஏப்ரல் 26,27ம் தேதி த.வெ.க., தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் விஜய் உரையாற்றுகிறார்.
இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோயம்புத்தூரில். குரும்பப்பாளையம் எஸ்.என்.எஸ். கல்லூரி வளாகத்தில், வரும் ஏப்ரல் 26,27ம் தேதி த.வெ.க., தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான செயல்பாடுகள் குறித்தும், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான களப்பணிகள் குறித்தும், அது தொடர்பாக கட்சி சார்ந்து நாம் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும் விஜய் உரையாற்றுகிறார்.
ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமே வாக்காளர்களும், பூத் கமிட்டி முகவர்களும் தான். எனவே தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி தொடர்பான பணிகளுக்கு முதுகெலும்பாகத் திகழும் பூத் கமிட்டி முகவர்கள் மட்டும், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description