
ஏ.வி.எம். தயாரிப்பில் உருவாகவுள்ள தமிழ் ஸ்டாக்கர்ஸ்
புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம்., இணையத் தொடரைத் தயாரிக்கவுள்ளது.
2014-ல் இதுவும் கடந்து போகும் என்கிற படத்தைக் கடைசியாகத் தயாரித்தது ஏ.வி.எம். நிறுவனம். இந்நிலையில் சோனி லைவ் (SonyLIV) ஓடிடியுடன் இணைந்து இணையத் தொடரைத் தயாரிக்க முன்வந்துள்ளது.
ஏ.வி.எம். தயாரிப்பில் உருவாகவுள்ள தமிழ் ஸ்டாக்கர்ஸ் (Tamil Stalkers) என்கிற இணையத் தொடரை அறிவழகன் இயக்கவுள்ளார். ஈரம், குற்றம் 23 போன்ற படங்களை அவர் இயக்கியுள்ளார்.
ஏவிஎம் புரொடக்ஷன்ஸைச் சேர்ந்த அருணா குகன், அபர்ணா குகன் இதுபற்றி கூறியதாவது: சோனி லைவ் உடன் இணைந்து தொடரைத் தயாரிப்பதில் ஆர்வமாக உள்ளோம் என்றார்கள். இந்த வருட இறுதியில் இணையத் தொடர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோனி லைவ் ஓடிடியில் தமிழ் ஸ்டார்க்கர்ஸ் தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description