இளைஞர்களின் போராட்டத்தைக் கொடூரமாக ஒடுக்குகிறது பாஜக அரசு: ராகுல் அறிக்கை

புதுடில்லி: '' அரசுப் பணிக்கான தேர்வுகளில் நடந்த முறைகேடு மூலம், பா.ஜ., அரசு இளைஞர்களின் நம்பிக்கையை உடைத்துவிட்டது,'' என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஏகலைவனைப் போல், இளைஞர்களின் விரல்களை வெட்டி, அவர்களின் எதிர்காலத்தை பா.ஜ., அழித்து வருகிறது. அரசு பணிகளுக்கு ஆட்களை எடுப்பதில் தோல்வி என்பது மிகப்பெரிய அநீதி. முதலில், பணி நியமனம் தொடர்பான அறிவிப்பு முறையாக வெளியிடப்படவில்லை. அப்படி அறிவிக்கப்பட்டாலும், தேர்வு முறையாக நடத்தவில்லை. அப்படி நடந்த தேர்விற்கு முன்னதாக, வினாத்தாள் கசிந்தது. நீதி கேட்டு போராடிய இளைஞர்களின் குரல்கள் கொடூரமாக ஒடுக்கப்பட்டது.
உ.பி., மற்றும் பீஹாரில் நடந்த வினாத்தாள் கசிவு சம்பவத்தைத் தொடர்ந்து ம.பி., மாநிலத்திலும் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடிய இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அந்த மாணவர்களை சந்தித்த முதல்வர், உங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி அளித்த போதும் இது நடந்துள்ளது. இளைஞர்களின் நம்பிக்கையை உடைத்த பா.ஜ., அரசு, ஜனநாயக அமைப்பை கொன்று விட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description