பணவீக்கம் அழுத்தம்: RBI எடுக்கும் முக்கிய தீர்மானம் என்ன.?
Reserve Bank of India நாணய கொள்கை கூட்டம்: ஏப்ரல் 8ல் முக்கிய அறிவிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி 2026-27 நிதியாண்டின் முதல் நாணய கொள்கை (MPC) கூட்டத்தை ஏப்ரல் 6 முதல் தொடங்கியுள்ளது. இந்த 2 நாள் கூட்டத்தின் முடிவுகள் ஏப்ரல் 8 காலை 10 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளன.
உலகளாவிய அழுத்தம் – பணவீக்கம் உயர்வு
ஈரான் போரால் ஏற்பட்ட எரிபொருள் விநியோக சிக்கல்கள் உலகளவில் பணவீக்கத்தை உயர்த்தியுள்ளன. இந்தியாவில் சில்லறை எரிபொருள் விலை நிலையாக இருந்தாலும், மொத்த விலை, LPG, விமான எரிபொருள் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதன் தாக்கமாக ஹோட்டல் முதல் காய்கறி வரை விலைகள் உயர்ந்து வருகின்றன.
முக்கிய கேள்வி: வட்டி விகிதம் மாறுமா.?
MPC கூட்டத்தில் முக்கியமாக பார்க்கப்படுவது ‘ரெப்போ விகிதம்’ (repo rate) மாற்றப்படுமா என்பது தான். தற்போது அது 5.25% ஆக உள்ளது.
வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டால்:
-
வீட்டு கடன் EMI
-
வங்கி வட்டி
-
முதலீட்டு சந்தை
அனைத்தும் நேரடியாக பாதிக்கப்படும்.
“Wait and Watch” அணுகுமுறை தொடருமா?
பிப்ரவரி கூட்டத்தில் RBI வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருந்தது. பொருளாதார நிலையை கவனித்து பார்க்கும் “wait and watch” அணுகுமுறையே மீண்டும் தொடரும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
ரூபாய் மதிப்பு மற்றும் பணவீக்கம்
ரூபாய் மதிப்பு சரிவு, இறக்குமதி செலவை உயர்த்தி பணவீக்கத்தை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதனால் RBI எடுக்கும் முடிவு மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
மக்கள் மீது தாக்கம்
வட்டி விகிதம் உயர்ந்தால்:
-
EMI அதிகரிக்கும்
-
நடுத்தர குடும்பங்கள் பாதிப்பு
-
MSME நிறுவனங்களுக்கு சுமை
அதனால், வட்டி விகிதம் மாற்றமில்லாமல் இருப்பதே சந்தைக்கு ஒரு “சர்ப்ரைஸ்” ஆக இருக்கும்.
ஏப்ரல் 8 காலை 10 மணிக்கு RBI முடிவுகளை அறிவிக்கும். அதன் பின்னர் மதியம் 12 மணிக்கு Sanjay Malhotra செய்தியாளர் சந்திப்பில் முடிவுகளின் காரணங்களை விளக்க உள்ளார்.