dark_mode
Image
  • Sunday, 11 January 2026

இனி திரைப்படங்கள் தயாரிக்கப் போவதில்லை என இயக்குநர் வெற்றிமாறன் அறிவிப்பு

இனி திரைப்படங்கள் தயாரிக்கப் போவதில்லை என இயக்குநர் வெற்றிமாறன் அறிவிப்பு
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், இனி திரைப்படங்களை தயாரிக்கும் முடிவிலிருந்து விலகி கொள்வதாக அறிவித்துள்ளார்.  தன்னை போன்ற நபர்கள் தயாரிப்பு நிறுவனத்தை நடத்துவது பெரும் சவாலாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
2012-ஆம் ஆண்டு முதல், தனது கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனிஎன்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெற்றிமாறன் சில படங்களை தயாரித்துள்ளார். ஆனால், சமீபகாலமாக அவர் தயாரித்த படங்கள் வெளியீட்டில் சிக்கல்களை சந்தித்து வருகின்றன. உதாரணமாக, அவர் தயாரித்த 'மனுஷி' திரைப்படம் தணிக்கை வாரிய சிக்கல் காரணமாக நீண்ட காலமாக வெளியாகாமல் உள்ளது.
 
இதேபோல், நடிகை 'பேட் கேர்ள்' திரைப்படமும் சென்சார் பிரச்னையால் இன்னும் வெளியிட முடியாமல் உள்ளது. இந்த தொடர்ச்சியான சவால்கள் காரணமாகவே, திரைப்பட தயாரிப்பை நிறுத்துவது என்ற முடிவை வெற்றிமாறன் எடுத்துள்ளார்.
 
 
வெற்றிமாறன் தனது முழு கவனத்தையும் இயக்கத்தில் மட்டுமே செலுத்த முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. 
 

related_post