"இந்திய பெண்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்கவேண்டும்" - தமிழிசை ஆவேசம்
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, முதல் முறையாக அமெரிக்காவுக்கு ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டுள்ளார். 3 நாள் பயணமாக சென்றடைந்த அவருக்கு, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸில், இந்திய வம்சாவளியினர் பெருமளவில் குவிந்து வரவேற்பு அளித்தனர்.
டெக்சாஸ், வாஷிங்டன் மாகாணங்களில் பல்வேறு தரப்பினருடன் ராகுல் காந்தி கலந்துரையாடும் வகையில் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி டல்லாஸில் பேசிய எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து பேசினார். குறிப்பாக இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.வின் மீது இருந்த பயம் மறைந்துவிட்டது. இது இந்திய மக்களின் மிகப்பெரிய சாதனை. ஆர்.எஸ்.எஸ். பெண்கள் வீட்டினுள்ளே முடங்கி இருக்க வேண்டும். அவர்கள் சமையலறையில் இருக்க வேண்டும், அதிகம் பேசக்கூடாது எனும் சிந்தனையைக் கொண்டது. ஆனால், காங்கிரஸ் பெண்கள் என்ன விரும்புகிறார்களோ அதனை செய்ய வேண்டும் எனும் சிந்தனைக் கொண்டது என பேசியிருந்தார்.
இது பா.ஜ.க.வினரை கொந்தளிக்கவைத்துள்ளது. மத்திய அமைச்சர்கள் பலரும் ராகுல் காந்திக்கு தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க.வின் மூத்த தலைவர் தமிழிசை தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், "பெண்களை சமையல் செய்வதற்கு மட்டுமே என்று வீட்டிற்குள்ளே பூட்டி வைக்கிறது பாஜக என ராகுல் காந்தி அமெரிக்காவில் பொய் பிரச்சாரம் செய்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி பெண்களுக்கு எதிரானது என்று குறை சொல்ல உங்களுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. பா.ஜ.க.வின் கடந்த 10 வருட ஆட்சியில், பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றுகிறது. ஆட்சி நிர்வாகத்திலும் அதிகப்படியான பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
பழங்குடியின பெண் தலைவரை இந்திய குடியரசுத் தலைவராக நிறுத்திய பா.ஜ.க.வை எதிர்த்து ஆண் வேட்பாளரை நிறுத்தி தோற்கடிக்க போராடியது உங்கள் குடும்பக் கட்சியான காங்கிரஸ்தான். உங்கள் தாய் சோனியா காந்தி மற்றும் பாட்டி இந்திரா காந்தி ஆகியோருக்கு மட்டுமே உயர் பதவிகள் வழங்கப்பட்டன. மற்றவர்களுக்கு பெயரளவில் ஏதோ சில பதவிகளே வழங்கப்பட்டன்.
அரசியலமைப்பு சட்டம் பற்றி அமெரிக்காவில் விமர்சிக்கிறீர்களே, இந்தியாவில் எமர்ஜென்சியை கொண்டு வந்து இந்தியாவை நெருக்கடி நிலைக்கு தள்ளியது உங்கள் பாட்டி இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் தான். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சென்னையில் நாம் இருவரும் எப்போது சைக்கிளில் பயணம் செய்யலாம் என்று ட்விட்டரில் பதிவிடும் ராகுல் காந்தி, எமர்ஜென்சி கால உங்கள் ஆட்சிக்காலத்தில் பெரும் சித்திரவதைக்கு ஆளானதாக கூறிக்கொள்ளும் தமிழக முதலமைச்சரிடம் அந்த கொடுமைகளை குறித்து கலந்துரையாடி தெரிந்து கொள்ளுங்கள்.
60 ஆண்டுகளுக்கும் மேலாக பாரத தேசத்தை ஆண்ட உங்கள் குடும்ப காங்கிரஸ் கட்சிக்கு இப்பொழுதுதான் பெண்ணுரிமை மற்றும் அரசியலமைப்பு சட்டம் பற்றி பேச ஞாபகம் வந்ததா?" என்று தெரிவித்துள்ளார். அதேபோல், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், "ராகுல் காந்தி வெளிநாட்டுக்கு சென்று நாட்டைப் பற்றி மோசமாக பேசியுள்ளார். இதை வன்மையாக கண்டிக்கிறோம். ராகுல் காந்தி இந்தியன் போல பேசவில்லை அந்நியன் போல பேசியுள்ளார். பெண்களைப் பற்றி தவறாக பேசிய ராகுல் காந்தி நாட்டில் உள்ள அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.
மத்திய நிதியமைச்சர் , குடியரசுத் தலைவர் என பெண்களுக்கு பல இடங்களில் பாஜக முன்னுரிமை அளித்து வருகிறது. இங்குள்ள பெண்கள் சமையல் அறையில் இருக்கிறார்கள் என ராகுல் காந்தி பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம். ராகுல் காந்தி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். அவசர காலத்தை உருவாக்கி பெண்களுக்கு நெருக்கடி நிலையை ஏற்படுத்தியது காங்கிரஸ் ஆட்சி. ராகுல் காந்திக்கு பெண் தலைவர்கள் என்றாலே அவரது அம்மா சோனியா காந்தியும், பாட்டி இந்திரா காந்தியும் தான்" என தெரிவித்தார்.