அவை தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் அய்யம்பேட்டையில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கினர்..!

அதிமுகவின் தற்காலிக அவை தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து அய்யம்பேட்டையில் அதிமுகவினர் இனிப்புகள் வழங்கினார் பாபநாசம் மேற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.
தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சதீஷ் பொதுக்குழு உறுப்பினர் மோகன் ஒன்றிய பொருளாளர் ஹாஜா ஷெரீப் கூட்டுறவு சங்க தனலவர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தார். ஒன்றிய சிறுபான்மை பிரிவு அவைத்தலைவர். அஜ்சி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசுகள் வெடித்து பொது மக்களுக்கும், பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதில் ஒன்றிய அவைத் தலைவர் நடராஜன், அய்யம்பேட்டை நகர செயலாளர் முருகன், சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் சேக் அலாவுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணைச் செயலாளர் முகமது இப்ராகிம் நன்றி கூறினார்.
