dark_mode
Image
  • Friday, 25 April 2025

தஞ்சாவூரில் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் தீ விபத்து! அலறியபடி வெளியேறிய கர்ப்பிணிகள்!

தஞ்சாவூரில் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் தீ விபத்து! அலறியபடி வெளியேறிய கர்ப்பிணிகள்!

தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையின் பிரசவ வார்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கர்ப்பிணிகள், குழந்தைகள் உட்பட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஏசி-யில் ஏற்பட்ட கோளாறே தீ விபத்துக்குக் காரணம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Thanjavur Government Raja Mirasudar Hospital fire: தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகில் அரசு ராசாமிராசுதார் மருத்துவமனை அமைந்துள்ளது. தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் வந்து செல்வது வழக்கம். திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக தினமும் ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

குறிப்பாக இந்த மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் அதிக அளவில் நடந்து வருகிறது. இதற்காக மருத்துவமனையில் பிரசவ வார்டுக்கு என்று தனி கட்டிடம் இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஏராளமான பிரசவம் நடந்து வருகின்றன. மேலும் பிரசவத்திற்காக கர்ப்பிணி பெண்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மருத்துவமனை எப்போதும் பரபரப்பாக இருக்கும். 

இந்நிலையில் இன்று மதியம் பிரசவ வார்டின் முதல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை கர்ப்பிணி பெண்கள் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அலறி கூச்சலிட்ட படியே வெளியேறினர். மேலும் மருத்துவமனையில் உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த தீ விபத்து தொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கர்ப்பிணிகள், குழந்தைகளை ஒவ்வொருவராக மீட்டு வேறு கட்டிடங்களுக்கு அழைத்து சென்றனர். மேலும் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்து குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு சென்ற அம்மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அப்பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்து மருத்துவர்களிடம் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்: கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் அனைவரும் நலமாக உள்ளனர். ஏ.சி.யில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

comment / reply_from

related_post