அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

புதுடில்லி: அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாடட்டத்தின்போது 15 பேர் உயிரிழக்க காரணமான பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, மக்கள் கூட்டத்திற்குள் வேன் புகுந்ததில் 15 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்த வேனை ஓட்டி வந்த ஷம்சுத் டின் ஜாபர் என்பவர் ராணுவ வீரர் என்பதும், வாகனத்தில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் கொடி கட்டி இருந்ததும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு வன்மையான கண்டனம் தெரிவிக்கிறேன். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் நினைவாக நமது எண்ணங்களும் பிரார்த்தனையும்உள்ளன. இந்த சோகத்தில் இருந்து மீண்டு வலமையும் ஆறுதலையும் பெறட்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description