dark_mode
Image
  • Friday, 29 November 2024

அனைத்து பேருந்துகளும் அதன் திட்டமிடப்பட்ட வழித்தடங்களில் இயங்கும் - #Chennai போக்குவரத்துக் கழகம்!

அனைத்து பேருந்துகளும் அதன் திட்டமிடப்பட்ட வழித்தடங்களில் இயங்கும் - #Chennai போக்குவரத்துக் கழகம்!

சென்னையில் இன்று மாநகர பேருந்துகள் வழக்கம்போல் செயல்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே வியாழக்கிழமை அதிகாலை கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டிருந்ததால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.

 

ஆனால், காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரம் நோக்கிச் செல்வதால், நேற்றிரவு முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை படிப்படியாக குறைந்தது. இதனால், பல்வேறு சாலைகளில் தேங்கியிருந்த மழை நீரும் வடிந்ததால், சாலைப் போக்குவரத்து சில இடங்களைத் தவிர மற்ற பகுதிகளில் சீரானது.

சென்னை மாநகரப் பேருந்துகள் வழக்கம்போல் அனைத்து வழித்தடங்களில் இயக்கப்படும் என்று சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. அதேபோல், சென்னை மெட்ரோ ரயில்கள் காலை 5 மணிமுதல் இரவு 11 மணிவரை அனைத்து வழித்தடங்களிலும் வழக்கம்போல் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அனைத்து பேருந்துகளும் அதன் திட்டமிடப்பட்ட வழித்தடங்களில் இயங்கும் - #Chennai போக்குவரத்துக் கழகம்!

comment / reply_from

related_post

newsletter

newsletter_description