dark_mode
Image
  • Tuesday, 29 April 2025

மே 3ல் தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசனை

மே 3ல் தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசனை

சென்னை: தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மே 3ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
 

முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் தலைமையில் இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் மே 3ம் தேதி காலை 10.30 மணிக்கு கூட்டம் நடக்கும் என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பணிகள் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.

தமிழக அமைச்சரவை மாற்றப்பட்ட நிலையில், இந்த கூட்டம் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

comment / reply_from

related_post